வளர்ப்பு மகளுடன் உறவில் ஈடுப்பட்ட சாமியார்; மருமகன் பகீர் தகவல்

திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (16:01 IST)
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது அவரது மருமகன் குற்றம்சாட்டியுள்ளார்.


 

 
நேற்று முந்தினம் பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங்  குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. இன்று சாமியாருக்கு 10 வருட ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது மருமகன் அதிர்ச்சியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். சாமியார் அவரது வளர்ப்பு மகளுடன் உறவு வைத்துக்கொண்டதை தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து சாமியார் மருமகன் கூரியதாவது:-
 
நான் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளராக இருந்தேன். 1999ஆம் ஆண்டு ப்ரியங்காவுக்கு ஹனிப்ரீத் இன்சான் என்று பெயர் வைத்தார் சாமியார். அதே ஆண்டு அவரை எனக்கு திருமணம் செய்து வைத்தார். 2011 ஆம் ஆண்டு நாம் சாமியாரை பார்க்க சென்றிருந்தேன். அபோது அவர் என் மனையுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்தேன் என்றார்.
 
தற்போது சாமியார் மருமகனின் இந்த புகார் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமியார் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்