ரூ.17,000 கோடிக்கும் அதிகமான நிதி முறைகேடுகள் மற்றும் வங்கிக் கடன் மோசடி தொடர்பான வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானி இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், ரூ.17,000 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடுகளிலும், வங்கி கடனை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கடந்த ஜூலை 24 முதல் மூன்று நாட்களுக்கு, அனில் அம்பானிக்கு தொடர்புடைய 50 நிறுவனங்கள் மற்றும் 25 நபர்களின் 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.