இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 390 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 80,639 என்ற புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 24,623 என்ற புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய வர்த்தகத்தில் ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், கோல் இந்தியா, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹீரோ மோட்டார்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி, ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, டைட்டன் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
அதே நேரத்தில், டி.சி.எஸ்., சன் பார்மா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஜியோ ஃபைனான்ஸ், இன்போசிஸ், ஹிந்துஸ்தான் லீவர், சிப்லா, ஏசியன் பெயின்ட்ஸ், அப்போலோ ஹாஸ்பிடல் உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன.