ராமதாஸ் தொலைபேசி ஹேக்? அன்புமணி காரணமா? - காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

Prasanth K

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (11:38 IST)

பாமக நிறுவனர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி இடையே முரண்பாடுகள் நிலவி வரும் நிலையில் ராமதாஸ் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இதனால் சமீபத்தில் நடந்த ராமதாஸின் பிறந்தநாள் விழாவில் கூட அன்புமணி கலந்துக் கொள்ளவில்லை.

 

மேலும் தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்து அன்புமணி ஒட்டுக்கேட்டதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது தற்போது ராமதாஸ் தரப்பில் கோட்டக்குப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

 

அதில் வைஃபை மூலமாக சட்டவிரோதமாக ராமதாஸின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டு அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் விட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் வைஃபை, சிசிடிவி கேமராக்களை பொருத்திக் கொடுத்தவர் அன்புமணியின் மேனேஜர் சசிக்குமார். இந்நிலையில் இந்த ஹேக்கிங் குற்றச்சாட்டு அன்புமணியை குறிப்பிடுவதாக உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்