ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பெத்தபுரம் பகுதியில் விபச்சார விடுதி நடத்தியதாக கூறப்படும் ஒரு பெண்ணுக்கு உதவியதாக, அந்த பகுதியை சேர்ந்த இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெத்தபுரம் பகுதியில் பாரதி என்ற பெண் விபச்சார விடுதி நடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், பாரதிக்கு அவ்வப்போது உதவி செய்து வந்ததாக காவலர்கள் சிவராம கிருஷ்ணா மற்றும் சிவ கிருஷ்ணா ஆகிய இருவரும் மீது புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணையில் அவர்கள் உதவி செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இரு காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபச்சார விடுதி நடத்திய பெண்ணை கைது செய்வதற்கு முன்பாக, அவருக்கு உதவியதாக கூறப்படும் இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.