பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் நாளிலிருந்தே எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளைக்கண்டித்து, நாடாளுமன்றத்தில் திடீரென எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை கைவிடக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சிகளின் எம்பிக்கள் கலந்துகொண்டனர்.