ஆந்திராவில் இன்றைய கொரோனா பாதிப்பு!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (18:33 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று ஆந்திராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 13,374  என்றும் கொரோனா வைரஸிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் குணமாகியவர்களின் எண்ணிக்கை 10290 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் தற்போது ஆந்திராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை 1,09,493 என ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில வாரங்களாக ஆந்திர மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாகவே ஆந்திராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்