14,000 மதுபாட்டில்கள் மேல் ரோலர் ஏற்றி உடைப்பு – ஏன் தெரியுமா?

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (10:13 IST)
ஆந்திர மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 14,000 மதுபாட்டில்கள் ரோலர் ஏற்றி அழிக்கப்பட்டன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக முழு ஊரடங்கு பல இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகளும் மூடப்பட்டு இருந்தன. அதனால் பல இடங்களில் போலி சரக்குகளும், கள்ளத்தனமாக மது கடத்தலும் நடந்தது. இது சம்மந்தமாக ஆந்திர மாநில அரசு 14,000க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் போலிஸாரால் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு 72 லட்சத்துக்கும் மேல் இருக்கும்.

இந்நிலையில் அவற்றை எல்லாம் ரோலரை ஏற்றி ஆந்திர மாநில கிருஷ்ணா மாவட்ட போலிஸார் அழித்துள்ளனர். இதைப் பார்க்க மக்கள் கூட்டம் அந்த பகுதியில் கூடியது குறிப்பிடத்தக்கது. இது சம்மந்தமான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்