துபாய் சென்று வந்த அமைச்சர் உயிரிழப்பு! – ஆந்திராவில் சோகம்!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (11:39 IST)
ஆந்திர தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் துபாய் சென்று வந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசில் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்து வருபவர் மேகபதி கௌதம் ரெட்டி.

கடந்த ஒரு வாரமாக ஆந்திராவின் தொழிற்சாலை திட்டம் குறித்து துபாயில் பல்வேறு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மேகபதி கௌதம் ரெட்டி நேற்று ஐதராபாத் திரும்பியுள்ளார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அமைச்சர் மேகபதி கௌதம் ரெட்டி இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்