அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்! – சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (08:51 IST)
இந்தியாவின் யூனியன் பிரதேசமும், சுற்றுலா தளமுமான அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் யூனியன் பிரதேசமும், சுற்றுலா தீவுமான அந்தமான் சுற்றுலா தீவுகளுக்கு சுற்றுலா பயணிகள் பலரும் பயணம் செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் அந்தமான் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்