அந்தமான் கடலில் இன்று மீண்டும் நிலநடுக்கம்! – அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (08:45 IST)
நேற்று அந்தமான் தீவுப் பகுதிகளில் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்திய யூனியன் தீவு பகுதியான அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று அதிகாலை முதலாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று பல்வேறு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்றும் அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதிகாலை 5.56 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக பல பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது அந்தமான் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்