இரண்டு நாட்கள் முன்னதாக நேபாளத்தில் நிலநடுக்கும் ஏற்பட்ட நிலையில் தற்போது அந்தமானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் 6 பேர் பலியான நிலையில் பல இடங்களில் கட்டிடங்கள், வீடுகள் இடிந்துள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் தற்போது அந்தமானில் ஒரு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவின் போர்ட்ப்ளேர் பகுதியில் தென்கிழக்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.