நேபாளத்தில் நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம்: வீடுகள் இடிந்து 6 பேர் உயிரிழப்பு

புதன், 9 நவம்பர் 2022 (07:59 IST)
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் நேற்று நள்ளிரவு திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
நேபாளத்தில் நேற்று நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
நேபாளத்தில் உள்ள டோட்டி என்ற மாவட்டத்தில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதில் வீடு இடிந்து விழுந்து 6 பேர் வரை உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து விரைவில் தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது டெல்லியிலும் சுமார் 15 விநாடிகள் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்