ஆப்பிள் வாட்சால் உயிர் பிழைத்த பெண் வழக்கறிஞர்

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (08:18 IST)
புனேவில் ஆப்பிள் வாட்சால் பெண் வழக்கறிஞர் ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் நடந்துள்ளது.
புனேவை சேர்ந்த பெண் வழக்கறிஞரான ஆர்த்தி ஜொஜெல்கர்(53).  கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு ஆப்பிள் வாட்சை வாங்கியுள்ளார். 
 
ஆப்பிள் வாட்சின் சிறப்பம்சம் என்னவென்றால் நமது உடலின் வெட்பநிலை, இரத்த அழுத்தம், இதய துடிப்பு உள்ளிட்டவற்றை தொடர்ந்து பதிவு செய்து, வேறுபாடுகள் இருப்பின் உடனடியாக அலாரம் மூலம் நமக்கு நினைவு கூறும்.
 
இந்நிலையில் ஆர்த்தி ஜொஜெல்கர் அலுவலக பணியில் இருந்த போது ஏற்பட்ட டென்ஷ்னால் அவரது இதயம் நிமிடத்திற்கு 140 முறை துடித்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு அவரது இதயம் திடீரென்று வேகமாக துடிப்பதாக ஆப்பிள் வாட்ச், ஆர்த்திக்கு நினைவு கூர்ந்துள்ளது.
 
இதனால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற ஆர்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்த்தி ஆப்பிள் நிறுவனத்திற்கு அந்த தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்