வேலூர் இளம்பெண்ணின் உயிரை குடித்த செல்போன்: அதிர்ச்சி தகவல்

வியாழன், 31 மே 2018 (08:31 IST)
பெரும்பாலானோர் தூங்கும்போது செல்போனை அருகில் வைத்து கொண்டே தூங்கும் பழக்கத்தை உடையவர்களாக இருக்கின்றனர். இதனால் சில சமயம் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை கூட ஏற்படுகிறது. அந்த வகையில் வேலூர் அருகே மார்பு அருகே செல்போனை வைத்து தூங்கிய இளம்பெண் இடிதாக்கியதால் மரணம் அடைந்தார்.
 
வேலூர் மாவட்டம் திருவலம் என்ற பகுதியில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது வீரலட்சுமி என்ற இளம்பெண் செல்போனை தனது மார்பு அருகே வைத்துபடி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அருகிலுள்ள தென்னைமரத்தை தாக்கிய பயங்கர இடி வீரலட்சுமி வைத்திருந்த செல்போனையும் தாக்கியுள்ளது. இதனால் வீரலட்சுமியின் மார்பு பகுதி கருகியது
 
இந்த எதிர்பாராத விபத்தில் வீரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.. இது குறித்து தகவல் அறிந்த வேலூர் மாவட்ட காவல் துறையினர் வீரலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாப்பேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
தூங்கும்போது எப்போதும் செல்போனை ஒருசில அடி தூரம் வைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் இதுபோன்ற விபத்துகளில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்