லதா மங்கேஷ்கர், மாதுரி தீட்சித்துடன் அமீத்ஷா சந்திப்பு ஏன்?

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (21:59 IST)
பாரளுமன்ற தேர்தல் இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் நிலையில் பாஜகவுக்கு ஆதரவு கேட்டு அக்கட்சியின் தேசிய தலைவர் பல பிரபலங்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் நாளை அவர் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், நடிகை மாதுரி தீட்சித் மற்றும் தொழிலதிபர் ரத்தன் டாட்டா ஆகியோர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
 
இவர்கள் மூவரையும் தனித்தனியே சந்திக்கும் அமித்ஷா,  பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுக்குமாறு வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதேபோல் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா 50 முக்கிய பிரமுகர்களை தனியாக சந்தித்து பா.ஜ.க ஆட்சியின் சாதனைகளை விளக்கி கூறி அவர்களின் ஆதரவை கோர உள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன
 
அமித்ஷா ஏற்கனவே  யோகா குரு பாபா ராம்தேவ், முன்னாள் ராணுவ தளபதிகளான தல்பீர் சிங் சுஹாக், சுபாஷ் காஷ்யாப், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் ஆகியோரை சந்தித்து அவர்களின் ஆதரவை கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்