டிசம்பர் 6ஆம் தேதிஅனைத்து கட்சி கூட்டம்: அழைப்பு விடுத்த மத்திய அரசு!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (12:13 IST)
டிசம்பர் 6ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
டிசம்பர் 7ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை அறிய டிசம்பர் 6ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
 
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்கள் தலைமையில் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது
 
ஆனால் நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் சுமூகமாக நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்