தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது: மத்திய அரசு

வியாழன், 24 நவம்பர் 2022 (11:45 IST)
தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் மத்திய அரசு தலையிட முடியாது என மத்திய அரசு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 
 
தேர்தல் ஆணையர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருவது குறித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பியதும் இதுகுறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தேர்தல் ஆணையர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமனம் என்பது மத்திய அரசின் தனிப்பட்ட அதிகாரம்  என்றும் தகுதியற்ற நபர்கள் தேர்வு செய்யப்பட்டால் அந்த உத்தரவை ரத்து செய்யும் அதிகாரம் மட்டுமே நீதிமன்றத்துக்கு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்