நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தஅனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்னும் சிறிது நேரத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது மகத்தான சாதனை என பெருமிதம் தெரிவித்தார். குடியரசு தின விழா அணிவகுப்பில் பெண்களின் வலிமை பரிசாற்றப்பட்டது என்றும் கூறினார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமலில் ஈடுபட்டு வருவதற்கு தனது அதிருப்தியை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அமலில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது என்றும் தேர்தலுக்குப் பின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்