பதவியேற்ற மூன்றே நாளில் அனைத்து அரசு அலுவலகங்களும் காலி: ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

திங்கள், 3 ஜூன் 2019 (07:03 IST)
ஆந்திர மாநில முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 30ஆம் தேதி பதவியேற்ற நிலையில், மூன்றே நாளில் தெலுங்கானாவில் உள்ள அனைத்து ஆந்திர அரசு அலுவலகங்களையும் காலி செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்த ஆந்திரபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாக பிரிந்தாலும் ஐதராபாத் நகரம் அடுத்த 16 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களின் தலைநகராக இருக்கும் என வரையறை செய்யப்பட்டது. இருப்பினும் ஆந்திர மாநிலத்திற்கு என ஒரு தலைநகரை உருவாக்க முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி 'அமராவதி' என்ற நகரை உருவாக்கினார். இந்த நகரத்தின் பணிகள் முடிந்தபின்னர் ஐதராபாத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களையும்  மாற்ற அவர் திட்டமிட்டிருந்தார்
 
ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற மூன்றாவது நாளில் ஐதராபாத்தில் உள்ள  தலைமைச்செயலகம், அரசுத் துறைகள், மாநகராட்சி போன்ற அனைத்தையும் அரசு அலுவலங்களையும் விஜயவாடா, குண்டூர் மற்றும் அமராவதி ஆகிய நகரங்களுக்கு மாற்ற உத்தரவிட்டார். இதனையடுத்து ஒரே நாளில் அரசு அலுவலகங்கள் காலி செய்யப்பட்டு மாற்றப்பட்டன. ஐதராபாத்தில் இயங்கி வந்த அனைத்து கட்டிடங்களையும் தெலுங்கானா அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்