ஜெகன்மோகன் ரெட்டி கண்டுபிடித்த முதல் ஊழல்: சிக்கலில் சந்திரபாபு நாயுடு

செவ்வாய், 28 மே 2019 (08:31 IST)
ஆந்திர மாநிலத்தில் அபார வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியை பிடித்து முதல்வராக போகும் ஜெகன்மோகன் ரெட்டி, மற்ற அரசியல்வாதிகள் போல் இல்லாமல் ஊழலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் இறங்குவார் என தெரிகிறது. பதவியேற்கும் முன்னரே சந்திரபாபு நாயுடுவின் பல திட்டங்களில் ஊழல் இருந்ததை தான் கண்டுபிடித்திருப்பதாகவும் குறிப்பாக தலைநகர் அமராவதி அமைக்கும் திட்டத்தில் சந்திரபாபு நாயுடுவும் அவரது பினாமி ரியல் எஸ்டேட்காரர்களும் செய்த ஊழலை அம்பலப்படுத்துவோம் என்று ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
 
அமராவதியில் தலைநகரை அமைக்க முடிவு செய்தவுடன் அந்த திட்டத்தை வெளிப்படுத்தாமல் சந்திரபாபு நாயுடு அந்த பகுதியில் ஏராளமான நிலங்களை பினாமி பெயரில் வாங்கி குவித்ததாகவும், தலைநகருக்காக நிலம் கையகப்படுத்தியபோது அந்த நிலங்கள் மட்டும் கையகப்படுத்தப்படவில்லை என்றும் ஜெகன்மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.
 

சந்திரபாபு நாயுடுக்கும் தனக்கும் எந்தவித முன்விரோதங்களும் இல்லை என்றும், ஆனால் ஆந்திராவின் பாதுகாவலன் என்ற முறையில் நடந்த ஊழல்களை மக்களிடம் தெரிவிப்பது தனது கடமை என்றும், முந்தைய அரசின் திட்டங்களில் ஊழல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நிச்சயம் அந்த திட்டங்கள் ரத்து செய்யப்படும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது மே 30ஆம் தேதி ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்