இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதன் காரணமாக இந்திய மக்கள் தங்கள் சராசரி வாழ்நாளில் 3.4 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளதாக வெளியாகியுள்ள ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் காற்று மாசுபாடு வேகமாக அதிகரித்துள்ளது. முக்கியமாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுபாட்டால் மக்கள் மூச்சுவிடவே சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு விடுமுறைகள் அறிவிக்கப்படும் சம்பவங்களும் தொடர்கதையாகியுள்ளது. இவ்வாறாக மாசுபட்ட காற்றை தொடர்ந்து சுவாசித்து வருவதால் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் குறைவதற்கான ஆபத்துகள் உள்ளதாக வெளியாகியுள்ள ஆய்வு தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக மக்கள் தங்கள் வாழ்நாளில் 3.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் வங்கதேசம் ஒட்டுமொத்தமாக காற்று மாசுபாடு கொண்ட நகரமாக மாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, வாகன பயன்பாடு அதிகரிப்பு காரணமாக காற்று மாசுபாடு தீவிரமடைந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவின் வடக்கு பகுதி நாட்டின் ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் வசிக்கும் பகுதியாக உள்ளதாகவும், 2022ம் ஆண்டில் காற்று மாசு தரநிலை 17 சதவீதம் குறைந்துள்ளதாகவும், ஆனாலும் இது தொடர்ந்தால் மக்கள் 5.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K