ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவு ரத்துக்கு பின் முதல் தேர்தல்.. மக்கள் மனநிலை என்ன?

Mahendran
செவ்வாய், 4 ஜூன் 2024 (12:54 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 வது பிரிவை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்த நிலையில் அதன் பின்னர் நடக்கும் முதல் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்பது முன்னிலை நிலவரங்களில் இருந்து தெரிய வருகிறது. 
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் ஐந்து தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இந்தியா கூட்டணி நான்கு இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது என்பதும் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
370 என்ற சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின் நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் இந்த பிரிவை நீக்கியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக தான் தேர்தல் முடிவும் வந்து கொண்டிருப்பதால் காஷ்மீர் மக்கள் மனநிலை என்ன என்பது தெரிய வந்துள்ளது
 
அரசியல் ரீதியாகவும் ஜம்மு காஷ்மீர் பொதுமக்கள் மத்தியிலும் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த கோபம் தற்போது வாக்குப்பதிவில் மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர் என்பதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்