காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனாவில் இணைகிறாரா ‘இந்தியன்’ பட நடிகை?

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (19:45 IST)
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன்’ படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில்  இணைந்தார். கட்சியில் இணைந்த மறுநாளே மும்பை வடக்கு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்தனர். ஆனால் இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டியிடம் ஊர்மிளா தோல்வி அடைந்தார்.
 
 
தேர்தல் தோல்விக்கு மகாராஷ்டிரா காங்கிரஸார் ஒத்துழைப்பு தராததே காரணம் என்று குற்றஞ்சாட்டிய ஊர்மிளா சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் சிவசேனா கட்சியின் தலைவரான உத்தவ் தாக்ரேயின் தனிச் செயலரான மிலிந்த் நவ்ரேகரை நடிகை ஊர்மிளா நேரில் சந்தித்து பேசியுள்ளதாகவும் விரைவில் அக்கட்சியில் அவர் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 
மகராஷ்டிர மாநில சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சிவசேனா கட்சியின் நடிகை ஊர்மிளா இணைய இருப்பதாகவும் அவருக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படுவதோடு அவர் வெற்றி பெற்றால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிரது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நான் எந்த கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டதாகவும் நடிகை ஊர்மிளா தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்