நான் வாழ்வது பெங்களூரிலா? அல்லது பாகிஸ்தானிலா என பிரபல நடிகை ஒருவர் வேதனையுடன் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல கன்னட நடிகை ஹர்ஷிகா என்பவர் தன்னுடைய கணவரை உள்ளூரில் உள்ள கன்னடவாசிகள் துன்புறுத்தியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு அந்த சம்பவத்தின் வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.
நாங்கள் வாழ்வது பெங்களூரிலா? அல்லது பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானிலா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் குடும்பத்துடன் உணவகம் சென்று இருந்தேன். நாங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு எங்கள் காரை எடுத்துக் கொண்டு புறப்பட தயாரான போது இரண்டு பேர் திடீரென வந்து உங்கள் கார் பெரிதாக இருக்கிறது காரை நகத்தினால் எங்கள் மீது உரசும் என வாதம் செய்தார்கள்.
நான் இன்னும் காரை நகர்த்த வில்லை கொஞ்சம் ஒதுங்குங்கள் என்று கூறிவிட்டு மெல்ல காரை நகர்த்தினார், அப்போது இவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று என் கணவரை இருவர் தாக்கம் முயன்றனர். இரண்டு பேர் என் கணவர் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை பறிக்க முயற்சித்தனர்.
என் கணவர் சுதாரித்துக் கொண்டு தங்கச் சங்கிலியை என்னிடம் கொடுத்தார், ஒட்டுமொத்த கும்பலும் ஆத்திரத்துடன் எங்கள் காரை சேதப்படுத்தினர், அப்போதுதான் எனக்கு நாம் பெங்களூரில் இருக்கிறோமா அல்லது பாகிஸ்தானில் வாழ்கின்றோமா என்ற எண்ணம் ஏற்பட்டது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை என்று ஆசை கூறினார்.