ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , ஆந்திர முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 13ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தேர்தல் வாகனத்தில் நின்றபடி பரப்புரை மேற்கொண்டு இருந்த ஜெகன்மோகன் மீது மர்மநபர் ஒருவர் கல்லை வீசி தாக்குதல் நடத்தினார்.