சேலம் விவசாயிகள் மீது வனத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு!- அமலாக்கத்துறை

செவ்வாய், 2 ஜனவரி 2024 (21:04 IST)
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள ராமநாயக்கன் பாளையம் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளான கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோருக்கு அவர்களின் சாதிப்பெயரைச் சொல்லி அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பிய விவகாரத்தில்  சேலம் வனத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள ராமநாயக்கன் பாளையம் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளான கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோருக்கு அவர்களின் சாதிப்பெயரைச் சொல்லி அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஜாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோர் சேலம் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இந்த நிலையில் வனத்துறை புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த விவகாரத்தில் சேலம் வனத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தடை செய்யப்பட்டுள்ள பட்டியலில் உள்ள காட்டு விலங்குகளை கொன்றுவிட்டதாக வனத்துறையினர் தரப்பு புகார் அளிக்கப்படதாகவும், அதன்படிப்படையில், வழக்குப் பதிவு செய்து சம்மன் அனுப்பியதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின்  நிலத்தை அபரிக்க முயன்ற விவகாரத்தில் பாஜக நிர்வாகி குணசேகரன் மீது நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்