இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு உளவியல் பரிசோதனை வழக்கு: மதுரை ஐகோர்ட் முக்கிய உத்தரவு..!

Siva

வியாழன், 4 ஜனவரி 2024 (13:33 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வன்முறை குறித்த படங்கள் எடுத்து வருவதால் அவரது உளவியல் குறித்து சோதனை செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் தரப்பில் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வன்முறையை தூண்டும் காட்சிகளை படமாக்குவதாக லோகேஷ் கனகராஜுக்கு எதிராக வழக்கு நேற்று வழக்கு தொடரப்பட்டது. மேலும் லோகேஷ் கனகராஜூக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது

ALSO READ: கணவனை கார் ஏற்றி கொலை செய்த மனைவி.. விபத்து போல் நாடகம்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!
 
நேற்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தரப்பில் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் அதிக வன்முறை காட்சிகள் மற்றும் போதை மருந்தை பயன்படுத்துவது போன்ற காட்சிகளை படமாக்கி  வருவது குறித்து சமூக ஆர்வலர்கள்  வருத்தம் தெரிவித்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்