லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை-விசாரணை ஒத்திவைப்பு
புதன், 3 ஜனவரி 2024 (13:05 IST)
லியோ படத்தில் வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகளை எடுத்து, திரைப்படமாக்கியதற்கு லோகேஷ் கனகராஜ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் மா நகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களிந் வெற்றிக்குப் பிறகு அவர் கமல், பகத்பாசில் ஆகியோரின் நடிப்பில் இயக்கிய படம் விக்ரம்.
இப்படம் இன்டஸ்டரி ஹிட் ஆனது. எனவே, தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சூப்பர் ஸ்டார்களும் அவரது இயக்கத்தில் நடிக்க ஆர்வமுடன் உள்ளனர்.
கடந்தாண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், ஆர்ஜூன், சஞ்சய் தத் , திரிஷா ஆகியோர் நடிப்பில் அக்டோபர் 18 ஆம் தேதி ரிலீஸான படம் லியோ.
இப்படம் இண்டஸ்டரி ஹிட் அடித்து, ரூ.615 கோடி வசூல் குவித்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
மேலும், வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகளை எடுத்து, திரைப்படமாக்கியதற்கு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.