ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்திட சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக கேரள முதல்வர் விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த விளையாட்டிற்கு பல முன்னணி நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு நட்சத்திரங்கள் எனப் பலரும் அம்பாசிட்டராகவும் விளம்பர மாடலாகவும் உள்ளனர்.
இதனால், மக்கள் பலரும் இந்த ஆன்லைன் சூதாட்ட கவர்ச்சி விளம்பரத்தால் அதில் விளையாடி, ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இதனால் அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மக்கள் பலரின் வாழ்க்கையை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்திட சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக கேரளமா நில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.