இறங்கி வந்த அரவிந்த் கெஜ்ரிவால்.. டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் தொகுதி உடன்பாடு..!

Mahendran
வியாழன், 22 பிப்ரவரி 2024 (12:57 IST)
டெல்லியில் தனித்து போட்டியிட போவதாக ஆம் ஆத்மி கட்சி கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியுடன் சுமூகமாக தொகுதி உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்வதில் பிரச்சனை இருப்பதாக கூறப்பட்ட நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் 17 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கி பிரச்சனை முடிக்கப்பட்டது. 
 
அதேபோல் டெல்லியில் ஆம் ஆத்மி  மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடும் என்றும் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இது குறித்த ஒப்பந்தத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கார்கே ஆகிய இருவரும் கையெழுத்திட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து இந்தியா கூட்டணி டெல்லியில் சுமூகமாக தொகுதி உடன்பாட்டை முடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்