மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், எம்.எஸ்.சுவாமி நாதன் ஆணையத்தின் அறிக்கையின்படி, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க புதியசட்டம் இயற்றப்பட வேண்டும். மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறினர்.
இந்த நிலையில், மத்திய அரசு விவசாயிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள், தலைநகர் டெல்லியை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.