குடியரசுத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த கோவில் பூசாரி கைது

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (13:11 IST)
கேரளாவிற்கு சென்றுள்ள குடியரசுத் தலைவரை கொல்லப்போவதாக கொலை மிரட்டல் விடுத்த கோவில் பூசாரியை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஞாயிற்று கிழமையாக இருந்தாலும் அரசு பயணமாக காலையில் தெலுங்கானா சென்றார். பின் மதியம் தமிழகம் வந்த அவர், திமுக தலைவர் கருணாநிதியைப் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின் கேரளா புறப்பட்டு சென்றார்.
 
3 நாள் சுற்றுப்பயணமாக கேரளா சென்ற குடியரசுத் தலைவரை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்றார். கேரளாவில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
 
இந்நிலையில் நேற்றிரவு திருச்சூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், குடியரசுத் தலைவர் கொலை செய்யப்படுவார் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
இதனையடுத்து அந்த நம்பரை வைத்து விசாரித்த போலீஸார், கொலை மிரட்டல் விடுத்த திருச்சூர் பகவதியம்மன் கோவில் பூசாரி ஜெயராமன் என்பரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்