பேரறிவாளனை விடுவிக்க முடியாது - குடியரசுத் தலைவர்

வெள்ளி, 15 ஜூன் 2018 (08:05 IST)
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யக் கோரிய தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 27 வருடங்களாக பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய ஏழு பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளனுக்கு  சமீபத்தில் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. பின்னர் தந்தையின் உடல்நலத்தை கணக்கில் கொண்டு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது. அதன் பின் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
கடந்த ஜனவரி மாதம் பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலை குறித்து 3 மாத்ததில் முடிவெடுக்கும்படி உச்சநீதிமன்றம் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசு பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுவிக்க கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு முறை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. 
இந்நிலையில் பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுவிக்க முடியாது எனக் கூறி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். இதனால் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை ஆக வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்