ஹெல்மெட் அணியாத போலீஸ்காரர்.. கேள்வி கேட்ட வாலிபருக்கு கன்னத்தில் அறை.... வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (19:34 IST)
சமீபத்தில் சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயமாக தலையில் ஹெல்மெட் அணிய வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று, பீகார் மாநிலத்தில் ஹெல்மெட் அணியாத ஒரு போலீஸ்காரர், இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, அவரை வழிமறித்த ஒரு  இளைஞர் கேள்வி கேட்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகிவருகிறது.
இந்தியாவில் நடக்கும் வாகன விபத்துகளில் அதிகமாக நடப்பது இரு சக்கர வாகனங்களால்தான் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பெரும்பாலான விபத்துகளில் உயிரிழப்பு அல்லது படுகாயம் அடைவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது ஹெல்மெட் அணியாமல் இருப்பதுதான். அதனால் இருசக்கரவாகனங்களில் பயணம் செய்யும்போது ஓட்டுபவர் மட்டும் இல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இதை நடைமுறைப்படுத்த காவல்துறையும் கடுமையாகப் போராடி வருகிறது.
 
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் மக்க ளவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் படி ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்களுக்கு ரூ 100க்குப் பதில் ரூ 1000 ஆகவும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் அபராதம்  ரூ.10 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.
 
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் போலீஸா ருக்கு இரட்டிப்பு அபராதம் விதிக் கப்படும் என  ஆணை பிறக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று பீகார் மாநிலத்தில் , சாலையில் ,ஹெல்மெட் அணியாத ஒரு போலீஸ்காரர், இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, அவரை வழிமறித்து ஒரு  இளைஞர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு போலீஸ்காரர், அந்த இளைஞரை அடித்துள்ளார். இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். மத்திய அரசின் சட்டத்தை போலீஸாரே மீறினால் எப்படி என மக்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். 

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்