நளினி உள்பட 6 பேர் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (07:56 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. அவர்களில் நளினி முருகன் உள்பட 6 பேர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் நளினி உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளுமா என்பது இன்று தெரியும்
 
நளினி உள்ளிட்ட 6 பேர் 30 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை ஆகி தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் இந்த சீராய்வு மனு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்