இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவுதமி அளித்துள்ள புதிய புகாரில், தனது நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடிப்பதற்காக அதிகாரிகள் சிலர் லஞ்சம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல், “வழக்கறிஞர்கள்” என்ற பெயரில் சமூக வலைத்தளங்கள் மூலம் மர்ம நபர்கள் தன்னை மிரட்டிவருவதாகவும் கூறியுள்ளார். மேலும், தனது எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சிலர் போஸ்டர்கள் அனுப்பி மிரட்டுவதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், தன்னை மிரட்டும் நபர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், மிரட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.