பாகிஸ்தான் போன்ற நாட்டிற்கு அணு ஆயுதம் தேவையா? உலக நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி..!

Mahendran

வியாழன், 15 மே 2025 (15:24 IST)
பாகிஸ்தான் போன்ற பாதுகாப்பு இல்லாத, முரட்டுத்தனமான நாட்டிற்கு அணு ஆயுதம் தேவையா என்பதை உலக நாடுகள் சிந்திக்க வேண்டும் என ஸ்ரீநகரில் ராணுவ வீரர்கள் மத்தியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று ஸ்ரீநகர் சென்ற பாதுகாப்பு துறை அமைச்சர், ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். "எதிரிகளை அழித்த ராணுவ சக்திகளை நேரில் பார்க்க வந்தேன்," என்று கூறிய அவர், "நேரம் வரும்போது கடினமான முடிவுகளை எடுப்போம்" என்றும் அவர் உறுதியளித்தார்.
 
மேலும், பயங்கரவாதத்தை ஒழிக்க எந்த எல்லைக்கும் செல்வோம் என்று கூறிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் போன்ற முரட்டுத்தனமான, தோல்வி அடைந்த தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாட்டிற்கு அணு ஆயுதம் தேவையா?
பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பானதா என உலக நாடுகளை நோக்கி அவர் கேள்வியை எழுப்பினார்.
 
பாகிஸ்தானின் ஆயுதக் கிடங்குகளை சர்வதேச அணு சக்தி முகமை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்