ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையா?

வெள்ளி, 11 நவம்பர் 2022 (13:38 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏற்கனவே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் தற்போது நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க தமிழக ஆளுநராக இதுவரை முடிவெடுக்காத நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த மே மாதம் பேரறிவாளன் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் தற்போது நளினி உள்ளிட்ட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை திருமாவளவன் உள்பட பல அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்