வேற்று கிரகவாசியின் பொருளைக் கண்டதாக இளைஞர் பிரதமருக்கு மின்னஞ்சல்...

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2018 (13:11 IST)
வேற்று கிரக வாசிகளைப் பற்றி நிறைய ஹாலிவுட் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க விமான ஓட்டிகளும், வெளிநாட்டவரும் ஏலியன்ஸ் மற்றும் வேற்று கிரக வாசிகளை  பார்த்ததாகக் கூறி வருகின்றனர்.
அதேபோல ஒரு சம்பவம் தற்போது இந்தியாவிலும் நடந்திருக்கிறது. மராட்டிய மாநிலம் புனேவில்  உள்ள கோத்ருட் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் தன் வீட்டுக்கு அருகே வேற்றுக் கிரக வாசியின் பொருளைக் கண்டதாக பிரதமர்   அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். அதே மின்னஞ்சலை பிரதமர் அலுவலகம் மராட்டிய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதனையைடுத்து போலீஸார் அங்கு விசாரணை மேற்கொண்டனர்.
 
மின்னஞ்சல் அனுப்பிய இளைஞரை போலீஸார் தேடிப் பிடித்து விசாரித்தனர்.அப்போது அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.
 
சில நாட்களுக்கு முன் அவர் மின் விளக்கு கம்பங்களைப் பார்த்து இருக்கிறார். அதை வேற்று கிரகவாசிகளின் பொருள் என கருதி இருக்கிறார்.அதாவது , அவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால்  மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மன பிரம்மையில் மின் விளக்கை வேற்று கிரகவாசிகளின் சிக்னல் என நினைத்து மின்னஞ்சல் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்