இளநரை ஏற்படுவதை தடுக்கும் அகத்தி கீரை...!

வியாழன், 13 டிசம்பர் 2018 (12:14 IST)
தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். அகத்தி கீரை சுவையானது மட்டுமல்லாமல் பல சத்துக்களையும், விட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஏராளமான மருத்துவக் குணங்களை கொண்ட அகத்தியின் வேர், இலை, பட்டை, பூ என்று பல பாகங்களும் பயனுடையது. அகத்திக் கீரை  உடலிள்ள துர்நீரை வெளியேற்றும். பித்த நோயை நீக்கும். வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும் குணம் அகத்திக் கீரைக்கு உண்டு.
 
அகத்திக்கீரை இரும்புச்சத்து அதிகம் நிறைந்தது. அத்துடன் நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான உணவுகளில் முதன்மையானது. அகத்திக்  கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து கரும்பட்டை,தேமல்,சொறி,சிரங்கு  உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும்.
 
அகத்தி இலைச் சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்தி வர ஒரு மாதத்தில் இருமல் விலகும். சாற்றில் ஒரு ஸ்பூன் தேன்  கலந்து அருந்த வயிற்றி வலி தீரும். அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேர் மூட்டுவலிக்கு மருந்தாக  அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது
 
உடலின் அதிகப்படியான பித்தத்தைக் குறைக்குமாம், ஜீரண சக்தியை அதிகரிக்குமாம். உணவில் கலந்து கொடுக்கப்படும் விஷப்பொருள்களை  முறிக்கும் குணமுடையதாம் நிறைய சாப்பிட்டால் வாயு பிரச்சனை உண்டாகுமாம்.
 
அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும், இளநரை ஏற்படுவதையும்  தடுக்கும். அகத்திக் கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் உள்ள பித்தம்  குறையும். அகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும்.
 
கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும். அகத்தி  கீரையை அடிக்கடி சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்