காரில் இருந்து இறங்கி 500 ரூபாய் நோட்டுக்களை வீசியெறிந்த நபர்: போலீஸார் வலைவீச்சு
காரிலிருந்து இறங்கி 500 ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசி எறிந்த மர்ம நபரை போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஹைதராபாத்தில் குல்சார் ஹவுஸ் என்ற இடத்தில் காரில் இறங்கி காரில் இருந்து இறங்கிய நபர் ஒருவர் திடீரென கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை காற்றில் பறக்கவிட்டார். இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் காற்றில் பறந்த 500 ரூபாய் நோட்டுகளை எடுக்க முண்டியடித்தனர்
இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த நபர் தான் வந்த காரில் திரும்பி சென்றுவிட்டார். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் அந்த நபர் யார் என்று போலீசார் தேடி வருகின்றனர்.