எங்கு பார்த்தாலும் இரட்டை: கேரளாவில் ஒரு அதிசய கிராமம்

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (05:01 IST)
கேரளாவில் உள்ள கொடின்ஹி என்ற சிறிய கிராமம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த கிராமத்தின் மொத்த ஜனத்தொகையே சுமார் 2000 குடும்பங்கள் என்று இருக்கும் நிலையில் இங்கு சுமார் 400 இரட்டையர்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கடந்த 2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 280 இரட்டையர்கள் இருந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் இரட்டையர்கள் எண்ணிக்கை 400ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் சராசரியாக வருடம் ஒன்றுக்கு 1000 இரட்டை குழந்தைகள் தான் பிறக்கின்றன. அவற்றில் 45 பேர் இந்த கிராமத்தில் பிறக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கிராமத்தில் மட்டும் எப்படி அதிகளவில் இரட்டைக்குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன என்பது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. இந்த ஆய்வில் வெளிநாட்டினர்களும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை இந்த ஆச்சரியத்திற்கு  விடை கிடைக்கவில்லை. வியட்நாம், கனடா, நைஜீரியா, பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள் இங்கு வருகை தந்து இரட்டையர்களின் டி.என்.ஏக்களை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்