ஆவணம் இல்லாமல் ரூ.2000 நோட்டுகளை மாற்ற அனுமதிக்கக் கூடாது: டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Webdunia
திங்கள், 22 மே 2023 (16:28 IST)
அடையாள அட்டை உள்பட தகுந்த ஆவணங்கள் இல்லாமல் ரூபாய் 2000 நோட்டை மாற்றுவதற்கு அனுமதிக்க கூடாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்த நிலையில் எஸ்பிஐ வங்கியில் தினமும் 20,000 மதிப்புள்ள 2000 நோட்டுக்களை எந்தவிதமான அடையாள சான்றும் இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் அடையாள சான்று இல்லாமல் 2000 ரூபாய் நோட்டை மாற்ற அனுமதிக்க கூடாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். 
 
இந்த அணுவில் 2000 ரூபாய் நோட்டுக்களை எந்தவித ஆவணமும் இன்றி மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்றும் இந்த அறிவிப்பு தன்னிச்சையானது மற்றும் முரண்பாடு ஆனது என்றும் தெரிவித்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்