வாவ்!! வாட் ஏ மிராக்கல்!! திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய மணப்பெண்

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2018 (09:52 IST)
கர்நாடக மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் திருமணம் முடிந்த கையோடு தேர்வெழுதிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன்(25). நவீன் தனியார் சிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஜெயநகர் பகுதியைச் சேர்ந்த சுவேதா(20) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மே மாதம் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்னர் திருமண நாள் நவம்பர் 18 என முடிவு செய்யப்பட்டு உறவினர்கள் அனைவருக்கும் பத்திரிக்கை கொடுக்கப்பட்டது. 
 
இந்நிலையில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வரும் சுவேதாவிற்கும் நவம்பர் 18 இறுதி தேர்வு என அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ந்துபோன ஸ்வேதா, இதுகுறித்து தனது வருங்கால கணவரிடம் தெரிவித்தார். நவீன் சுவேதாவிடம் ஏன் இதற்கெல்லாம் பயப்படுற, கல்யாணம் முடிந்ததும் நீ போய் தேர்வு எழுதலாம் என ஆறுதல் கூறியுள்ளார். ஸ்வேதாவிற்கு ஒரு பக்கம் பயம் இருந்துகொண்டே இருந்தது.
 
இந்நிலையில் நவம்பர் 18ந் தேதியான நேற்று திருமணம் முடிந்த கையோடு நவீனே, தனது மனைவி சுவேதாவை காலேஜுக்கு அழைத்து சென்று தேர்வெழுத வைத்துள்ளார். மணக்கோலத்துடன் ஸ்வேதா தேர்வெழுதினார். 
 
பின்னர் இதுகுறித்து கூறிய ஸ்வேதா, இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த என் கணவர் நவீனுக்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என உணர்ச்சி பொங்க பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்