100 ரூபாய் கேட்ட போலீஸ்: கத்தியை காட்டிய இளைஞர்; அதிர்ந்துபோன காவலர்கள்

சனி, 17 நவம்பர் 2018 (13:30 IST)
லைசென்ஸ் இல்லாததால் 100 ரூபாய் அபராதம் செலுத்த சொன்ன டிராபிக் போலீஸாரிடம் வாலிபர் கத்தியை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கபல்லவரா என்ற பகுதியில் டிராபிக் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
 
அவரை வழிமறித்த போலீஸார், அந்த நபரிடம் லைசென்ஸை கேட்டுள்ளனர். இல்லையென்றால் 100 ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு செல் என கூறியுள்ளனர். அந்த நபர் வண்டியின் கவரில் கையை விட்டார். போலீஸாரும் லைசென்ஸை தான் எடுக்கப் போகிறான் என கருதினர்.
 
ஆனால் அவனோ ரத்தம் சொட்ட சொட்ட ஒரு கத்தியை உள்ளுருந்து எடுத்தான். இதனைப் பார்த்து அந்திந்த போலீஸார், என்னடா பண்ணிட்டு வந்த என கேட்டனர்.
அதற்கு அந்த நபர் பணப்பிரச்சனையில் எனது நண்பனை குத்திவிட்டு போலீஸில் சரணடைய சென்றுகொண்டிருந்தேன். அதற்குள் என்னை நீங்கள் பிடித்துக் கொண்டு லைசென்ஸை கொடு, அதைக் கொடு, இதைக் கொடு என டார்ச்சர் செய்கிறீர்கள் என கூறியுள்ளார்.
 
இதனால் அதிர்ந்து போன போலீஸார் இதுகுறித்து அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்க விரைந்து வந்த காவல் துறையினர் அந்த வாலிபரை கைது செய்தனர். 
 
மேலும் அந்த வாலிபரால் தாக்கப்பட்ட நபரை மீட்ட போலீஸார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்