மத மாநாட்டில் கலந்து கொண்ட 8 பேர் மலேசியாவுக்கு தப்ப முயற்சி!
டெல்லியில் கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15 வரை மத மாநாடு ஒன்று நடைபெற்றதும், இந்த மாநாட்டில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என்பதும், அதுமட்டுமின்றி மலேசியா இந்தோனேசியா உள்பட வெளிநாட்டிலிருந்தும் மதத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த மத மாநாட்டில் கலந்துகொண்ட பெரும்பாலானோர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தமிழகத்தில் கூட 422 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மத மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த மத மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டவர்கள் தப்பிச் செல்லாத வகையில் அவர்களுடைய விசா அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் சமீபத்தில் மலேசியாவுக்கு செல்ல தயாராக இருந்த மீட்பு விமானம் ஒன்றில் சந்தேகத்துக்குரிய 8 பேர் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த எட்டு பேரையும் கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட 8 பேர்களிடம் நடைபெற்ற விசாரணையில் அனைவரும் மலேசியாவை சேர்ந்தவர் என்றும் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்றும் விசா ரத்து செய்யப்பட்டதால் சட்டவிரோதமாக மீட்பு விமானத்தில் தப்ப முயன்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது