இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக மோசமாக பரவி லட்சக்கணக்கானவர்களை பலியாக்கி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டிலிருந்து பரவிவருகிறது. இதனை அடுத்து பல நாடுகள் இங்கிலாந்து நாட்டிலிருந்து வரும் விமானத்தை தடை செய்துள்ளன என்பதும் இங்கிலாந்து நாடும் தன்னுடைய நாட்டில் பரவி வரும் புதிய உருமாரிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவிலும் இந்த உருமாறிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. நேற்று வரை 58 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது மேலும் 15 பேருக்கு அதிகமாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.