இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டம் நடைபெறும் போது வெளிநாட்டு பிரமுகர்கள் சிலர் சிறப்பு விருந்தினராக வருகை தருவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க இருந்தார் .
இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இருநாட்டு சார்பிலும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய பயணத்தை ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் வருகையே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ஏன் குடியரசு தினவிழாவையே ரத்து செய்யக் கூடாது என காங்கிரஸ் எம்பி சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.