உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில், 75 வயதான முதியவர் ஒருவர், 35 வயதான பெண்ணை திருமணம் செய்த மறுநாள் காலையே எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம், அவரது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
உயிரிழந்த சங்க்ரு ராம் ஒரு விவசாயி. அவரது மனைவி ஓராண்டுக்கு முன்பு இறந்ததையடுத்து, அவர் தனியாக வசித்து வந்தார். சங்க்ரு ராமுக்குக் குழந்தைகள் இல்லாததால் அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். இதை அவருடைய உறவினர்கள் எதிர்த்தனர்.